3 வினாடிகளில் ஒரு கப் காபி குடித்த நபர் உலக சாதனை
19 தை 2024 வெள்ளி 11:12 | பார்வைகள் : 1859
உலகில் பெரும்பாலான மக்கள் காபியை (Coffee) விரும்புகிறார்கள்.
சுடச்சுட காபியின் வாசனையை முகரும் போதே முழு உடலும் சுறுசுறுப்பாக மாறும்.
சிலருக்கு காலையில் எழுந்தவுடன் ஒரு கப் காபி குடிக்க வேண்டும், அல்லது படுக்கையை விட்டு எழவே மாட்டார்கள். சிலர் தினமும் ஐந்தாறு கப் காபி குடிப்பார்கள்.
பல்வேறு ஆய்வுகள் காபி குடிப்பதால் சிறந்த ஆரோக்கிய நன்மைகள் உள்ளன என்பதைக் காட்டுகின்றன. அதே போல் காபி அதிகமாக குடித்தால் உடல் நலத்திற்கு கேடு விளையும் என்பது அனைவரும் அறிந்ததே.
சிலர் காபியை விரும்பி குடிப்பார்கள், ஆனால் எவ்வளவு விரும்பினாலும் நொடிகளில் மின்னல் வேகத்தில் குடிக்க முடியாது.
இங்கு வரும் வீடியோவை பார்த்தால் அதிர்ந்து போவீர்கள்.
இதோ ஒருவர் மின்னல் வேகத்தில் காபி குடித்து உலக சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
அந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது.
பல உலக சாதனைகளைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் ஒரு கப் காபியை இந்த நபர் கண் இமைக்கும் நேரத்தில் குடித்த்துள்ளார். வெறும் 3 வினாடிகளில் இந்த காபியை குடித்து முடித்தார்.
அவர் பெயர் Felix von Meibom. ஜேர்மனியின் Hesse மாநிலத்தில் Frankfurt நகரத்தில் வசிக்கிறார்.
Guinness World Recordsன் படி, மின்னல் வேகத்தில் ஒரு கோப்பை காபி குடித்து பெலிக்ஸ் சாதனை படைத்துள்ளார். தற்போது கின்னஸ் உலக சாதனைக்கான காணொளி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது.
இந்த காணொளி கின்னஸ் உலக சாதனையின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டது.
காணொளியில், ஒரு காபி குவளையில் Black Coffee ஊற்றப்படுகிறது. மேசையில் இருந்த மொபைல் போனில் நேரம் செட் ஆனது.. சரியாக 3 வினாடிகளில் ஒரே கோப்பையில் காபி முழுவதையும் குடித்து விட்டார்.
இந்த சுவாரசியமான பதிவை பார்த்த நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
நான் தினமும் காலையில் இதைச் செய்கிறேன் என்று ஒருவர் நகைச்சுவையாக கூறுகிறார். இன்னொரு பயனர் இதை என்னாலும் செய்ய முடியும் என்றார்.