Paristamil Navigation Paristamil advert login

20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் ஜோதிகா மாதவன் கூட்டணி?

20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் ஜோதிகா மாதவன் கூட்டணி?

19 தை 2024 வெள்ளி 13:23 | பார்வைகள் : 5592


கடந்த 1999 ஆம் ஆண்டு பிரபல நடிகர் தல அஜித் நடிப்பில் வெளியான "வாலி" என்கின்ற திரைப்படம் தான் பிரபல நடிகை ஜோதிகா அவர்கள் தமிழில் களமிறங்கிய முதல் திரைப்படம். ஆனால் அதற்கு முன்னதாக கடந்த 1997 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான "Doli Saja Ke Rakhna" என்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார். 

அந்த திரைப்படத்தில் நடித்ததற்காக Film Fare விருதுக்கு அவர் பரிந்துரை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அதற்குப் பிறகு நேரடியாக ஹிந்தி திரைப்படங்களில் நடிக்காத ஜோதிகா அவர்கள், சுமார் 26 ஆண்டுகள் கழித்து மீண்டும் பாலிவுட் உலகில் தற்பொழுது களமிறங்குகிறார். பிரபல நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகியுள்ள "சைத்தான்" என்கின்ற திரைப்படத்தில் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்.

அதுஒருபுரம் இருக்க ஜோதிகாவின் திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான திரைப்படங்களாக இருக்கும் டும் டும் டும் மற்றும் பிரியமான தோழி ஆகிய படங்களில் அவரோடு இணைந்து நடித்த பிரபல நடிகர் மாதவன் அவர்களும் இந்த ஷைத்தான் படத்தில் நடித்துள்ளார். ஆகவே சுமார் 20 ஆண்டுகள் கழித்து மாதவன் மற்றும் ஜோதிகா ஆகிய இருவரும் இந்த படத்தில் இணையவுள்ளனர். 

வர்த்தக‌ விளம்பரங்கள்