Paristamil Navigation Paristamil advert login

பிலிப்பைன்ஸில் டோக்சுரி புயல் -இருவர் பலி

பிலிப்பைன்ஸில் டோக்சுரி புயல் -இருவர் பலி

27 ஆடி 2023 வியாழன் 05:42 | பார்வைகள் : 3874


பிலிப்பைன்ஸ் நாட்டில் டோக்சுரி புயல் தாக்கி வருகின்றது.

இந்த புயல் தாக்கியதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சக்திவாய்ந்த புயல் வீடுகளின் கூரைகளை சேதப்படுத்தியதாகவும், மரங்களை வீழ்த்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த புயல் காரணமாக 16,000 மக்கள் அந்த பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 430 மைல் (700 கிமீ) காற்று மற்றும் மழையுடன் கூடிய புயலால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்