Paristamil Navigation Paristamil advert login

மட்டன் சுக்கா

மட்டன் சுக்கா

19 தை 2024 வெள்ளி 14:29 | பார்வைகள் : 1747


ஆனால் ஹோட்டல்களுக்கு சென்றால் பலரும் விரும்பி சாப்பிடுவது ‘மட்டன் சுக்கா’ தான். சுவையான மட்டன் சுக்காவை ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள் :

மட்டன்

இஞ்சி பூண்டு விழுது

வெங்காயம்

தக்காளி

சிவப்பு மிளகாய் தூள்

மஞ்சள் தூள்

எண்ணெய்

காய்ந்த மிளகாய்

கல்பாசி

இஞ்சி பூண்டு விழுது

உப்பு

கறிவேப்பிலை

முந்திரி

நெய்

கொத்தமல்லி இலை

தண்ணீர்

மசாலா அரைக்க :

கொத்தமல்லி விதை

சீரகம்

பெருஞ்சீரகம்

கசகசா

மிளகு

முந்திரி

இலவங்கப்பட்டை

கிராம்பு

பிரியாணி இலை

கறிவேப்பிலை


செய்முறை :

முதலில் மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும்.

பிறகு அடுப்பில் பிரஷர் குக்கரை வைத்து அதில் மட்டனை சேர்த்து அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.

பிறகு மட்டனுக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4-5 விசில் வரும் வரை வேக விடவும்.

அடுத்து மற்றொரு அடுப்பில் ஒரு கடாய் வைத்து சூடானதும் அதில் கொத்தமல்லி விதை, சீரகம், பெருஞ்சீரகம், கசகசா, மிளகு, முந்திரி இலவங்கப்பட்டை, கிராம்பு மற்றும் பிரியாணி இலை ஆகியவற்றைச் சேர்த்து வறுக்கவும்.

இந்த மசாலா பொருட்கள் அனைத்தும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

இவை அனைத்தும் ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கும் முன் சிறிது கறிவேப்பிலை சேர்த்துக்கொள்ளவும்.

பின்னர் சிறிது தண்ணீர் சேர்த்து அனைத்து மசாலா பொருட்களையும் நன்றாக பேஸ்டாக அரைத்துக்கொள்ளவும்.

பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் காய்ந்த மிளகாய் மற்றும் கல்பாசி போட்டு வதக்கவும்.

பிறகு நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.

இவை அனைத்தும் ஓரளவு வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்துக்கொள்ளவும்.

அனைத்தும் ஒரு பேஸ்ட்டாக மாறியவுடன் வேகவைத்துள்ள மட்டனை வேகவைத்த தண்ணீரோடு சேர்த்து கலந்து கொள்ளவும்.

ஒரு 5 நிமிடங்களுக்கு நன்றாக தண்ணீர் வற்றும் வரை நன்கு சமைக்கவும்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்