Paristamil Navigation Paristamil advert login

யாழில் தாயின் கணவரால் சிறுமிக்கு நேர்ந்த கதி

யாழில் தாயின் கணவரால் சிறுமிக்கு நேர்ந்த கதி

27 ஆடி 2023 வியாழன் 06:06 | பார்வைகள் : 3125


தாயின் கணவரால் 13 வயது சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக , கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் , இரண்டாம் தாரமாக திருமணம் செய்துள்ளார். தனது முதல் தாரத்தின் மூன்று பிள்ளைகளுடன் , இரண்டாம் தாரத்துடன் குடும்பம் நடாத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் தாயின் இரண்டாவது கணவர் , சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு  கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , பொலிஸார் சிறுமியை மீட்டு வைத்திய பரிசோதனைக்காக வைத்திய சாலையில் அனுமதித்துள்ளதுடன் , சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

வர்த்தக‌ விளம்பரங்கள்