ஆந்திராவில் உலகின் மிகவும் உயரமான அம்பேத்கர் சிலை திறப்பு

20 தை 2024 சனி 01:38 | பார்வைகள் : 4773
ஆந்திராவில் உலகின் மிகவும் உயரமான அம்பேத்கர் சிலையை அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி திறந்து வைத்தார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சுவராஜ் மைதானத்தில் 206 அடி உயரத்தில் அம்பேத்கருக்கு சிலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. சிலையை சுற்றி பூங்கா, திறந்த வெளி அரங்கு, உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கட்டுமான பணிகள் நிறைவடைந்ததையடுத்து இன்று நடந்த விழாவில் சிலையை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திறந்து வைத்தார். இச்சிலை சமத்துவம், சமூக நீதியின் அடையாளம் என்பதால் சமூக நீதிக்கான சிலை என தனது எக்ஸ் வலைதளத்தில் பதவிவேற்றியுள்ளார்.
முன்னதாக பக்கத்து மாநிலமான தெலுங்கானாவில் 175 அடி உயரத்தில் அம்பேத்கருக்கு சிலை அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.