இறந்த குழந்தையின் சாம்பலை கற்களாக மாற்றிய பெற்றோர்...

20 தை 2024 சனி 03:28 | பார்வைகள் : 6737
அமெரிக்காவில் அரிய வகை நோயால் உயிரிழந்த 15 மாத பெண் குழந்தையின் சாம்பலை கற்களாக மாற்றி அவற்றை பாதுகாத்து வருவதாக குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
கெய்லி மற்றும் ஜேக் மாஸ்ஸியின் என்ற அமெரிக்க தம்பதியின் மகள் பாப்பிக்கு 9வது மாதத்தில் அரிய வகை TBCD என்ற மரபணு கோளாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து குழந்தை பாப்பிக்கு தொடர் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், சுவாச தொற்று ஏற்பட்டு கடந்த ஏப்ரலில் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக குழந்தை பாப்பி தன்னுடைய 15வது மாதத்தில் உயிரிழந்தார்.
குழந்தை உயிரிழந்த பிறகு, மகள் பாப்பியின் உடல் சாம்பலை கெய்லி மற்றும் ஜேக் மாஸ்ஸி தம்பதி கற்களாக மாற்றியுள்ளனர்.
அத்துடன் மகளின் நினைவை போற்றும் வகையில் அந்த கற்களை அந்த தம்பதி வீட்டில் வைத்து பாதுகாத்து வருகின்றனர்.
இதன் மூலம் உயிரிழந்த 15 மாத மகள் பாப்பி தங்களுடன் வீட்டில் இருப்பதாக நம்புவதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.