இன்ஸ்டாகிராம் செயலிக்கான புதிய அப்டேட்

20 தை 2024 சனி 04:36 | பார்வைகள் : 4593
பயனர்களின் இரவு நேர தூக்கத்தை ஊக்கப்படுத்தும் விதமாக மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் என உலகின் முன்னணி சமூக ஊடக வலைதளங்களை அதன் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் நிர்வகித்து வருகிறது.
மெட்டா நிறுவனம் தன்னுடைய பயனர்களை தொடர்ந்து புத்துணர்ச்சியுடன் வைத்து இருக்கும் விதமாக புதிய அப்டேட்களை வழங்கிய வண்ணம் உள்ளது.
அந்த வகையில் உலக அளவில் மில்லியன் கணக்கான இளைஞர்களை ஈர்த்துள்ள இன்ஸ்டாகிராம் செயலிக்கான புதிய அப்டேட்டை மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த புதிய அப்டேட்டில் Night time Nudges என்ற புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் இரவு நேரங்களில் தூங்காமல் 10 நிமிடங்களுக்கு மேல் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்ப்பவர்கள் அல்லது DMகளில் நேரம் செலவிடுபவர்களுக்கு ரிமைண்டர் அனுப்பப்படும்.
இன்ஸ்டாகிராமில் அதிக நேரம் செலவிடும் இளைஞர்கள் உறங்க வேண்டும் என்பதற்காக இந்த புதிய அம்சம் அறிமுகப்படுத்தியுள்ளதாக மெட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1