இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் குறித்து அமெரிக்கா எதிர்ப்பு
20 தை 2024 சனி 10:02 | பார்வைகள் : 2322
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஹமாஸ் இடங்களை குறிவைத்து வடக்கு காசா பகுதிக்குள் நுழைந்து இஸ்ரேலிய படைகள் ஊடுருவி வருகின்றனர்.
இதுவரை நடைபெற்ற போர் தாக்குதல் பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 24,762 பேர் மொத்தமாக கொல்லப்பட்டுள்ளனர். 62,108 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் மூலோபாய தொடர்புகளுக்கான ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி, இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கையில் “பொது போர் நிறுத்தம்” கொண்டு வருவதை தனது நாடு எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த போர் நிறுத்தம் ஹமாஸ் படைகளுக்கு நன்மை செய்வதை விட வேறு யாருக்கும் நன்மை பயக்கும் என்று நாங்கள் நம்பவில்லை. அதே சமயம் நாங்கள் பிணைக் கைதிகளை மீட்க உதவும் மனிதாபிமான வெளியேற்றம் மற்றும் பொதுமக்களுக்கான மருத்துவ உதவிகள் ஆகியவற்றை வழங்க தொடர்ந்து ஆதரவு வழங்குவோம்.
ஆனால் போர் நிறுத்தத்திற்கு இந்த நேரத்தில் நாங்கள் ஆதரவு வழங்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 6ம் திகதி போர் நிறுத்தம் இருந்தது என்பது நினைவு படுத்துவது முக்கியம் என்று கருதுகிறேன் என ஜான் கிர்பி பேச்சை முடித்தார்.