Paristamil Navigation Paristamil advert login

டோலிவுட் இயக்குநருடன் இணையும் அஜித்..

டோலிவுட் இயக்குநருடன் இணையும் அஜித்..

20 தை 2024 சனி 10:00 | பார்வைகள் : 3913

நடிகர் அஜித்தின் 63-வது படம் குறித்தான அப்டேட் வெளியாகியுள்ளது. டோலிவுட் இயக்குநருடன் அஜித் இணைகிறார் என்பது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

நடிகர் அஜித் தற்போது ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக வெளிநாடுகளில் நடந்துவரும் நிலையில், அஜித்தின் அடுத்தப் படங்கள் குறித்தான செய்திகளும் அவ்வப்போது வந்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில், நடிகரும் இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் தனது 64-வது படத்தில் நடிக்க இருக்கிறார் எனவும் இது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது எனவும் சொல்லப்படுகிறது.

இதுகுறித்தான, அதிகாரபூர்வ அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில்தான் ‘ஏகே65’ அப்டேட் வந்துள்ளது. இதில், நடிகர் அஜித் தெலுங்கு இயக்குநர் பிரஷாந்த் நீலுடன் இணைகிறார். அதற்கான முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

டோலிவுட்டில் ‘கேஜிஎஃப்’, ‘சலார்’ போன்றப் படங்கள் மூலம் பிரபலமடைந்தவர் இயக்குநர் பிரஷாந்த் நீல். அவருடன் அஜித் தனது 65-வது படத்தில் இணைய இருக்கிறார் என்ற தகவலே ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்தக் கூட்டணி உறுதியாக வேண்டும் என அஜித் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.நடிகர் அஜித்தின் 63-வது படம் குறித்தான அப்டேட் வெளியாகியுள்ளது. டோலிவுட் இயக்குநருடன் அஜித் இணைகிறார் என்பது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

நடிகர் அஜித் தற்போது ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக வெளிநாடுகளில் நடந்துவரும் நிலையில், அஜித்தின் அடுத்தப் படங்கள் குறித்தான செய்திகளும் அவ்வப்போது வந்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில், நடிகரும் இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் தனது 64-வது படத்தில் நடிக்க இருக்கிறார் எனவும் இது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது எனவும் சொல்லப்படுகிறது.

இதுகுறித்தான, அதிகாரபூர்வ அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில்தான் ‘ஏகே65’ அப்டேட் வந்துள்ளது. இதில், நடிகர் அஜித் தெலுங்கு இயக்குநர் பிரஷாந்த் நீலுடன் இணைகிறார். அதற்கான முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

டோலிவுட்டில் ‘கேஜிஎஃப்’, ‘சலார்’ போன்றப் படங்கள் மூலம் பிரபலமடைந்தவர் இயக்குநர் பிரஷாந்த் நீல். அவருடன் அஜித் தனது 65-வது படத்தில் இணைய இருக்கிறார் என்ற தகவலே ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்தக் கூட்டணி உறுதியாக வேண்டும் என அஜித் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்