Saint-Denis நகர துணை முதல்வர் மீது தாக்குதல்! - மூவருக்குச் சிறை!!
20 தை 2024 சனி 10:21 | பார்வைகள் : 3469
Saint-Denis நகர துணை முதல்வர் மீது இடம்பெற்ற தாக்குதல் ஒன்றைத் தொடர்ந்து, தாக்குதலாளிகளான மூவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 19 ஆம் திகதி நேற்று வெள்ளிக்கிழமை இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த மூவரும் கடந்த டிசம்பர் மாதத்தில் Saint-Denis நகர துணை முதல்வர் மீது வீதியில் வைத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். 2,500 யூரோக்கள் பணத்துக்காக இந்த தாக்குதலை தான் மேற்கொண்டதாக அவர்கள் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 20 ஆம் திகதி சந்திப்பு ஒன்றை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த துணை முதல்வர் Oriane Filhol இனை, பின்னால் சென்ற இருவர் தலையில் தாக்கியுள்ளனர். அதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணைகளில் மூன்றாவது நபர் ஒருவர் இதில் தொடர்புபட்டிருப்பதும், அவர் பணம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டதன் பின்னரே இவர்கள் இருவரும் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிகப்பட்டுள்ளது.
அதையடுத்து நேற்று பொபினி நகர குற்றவியல் நீதிமன்றம் மூவருக்கும் 18 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தது.