Rhône பயணமாகும் பிரதமர் கேப்ரியல் அத்தால்! - விவசாயிகளுடன் சந்திப்பு!!
20 தை 2024 சனி 10:38 | பார்வைகள் : 10216
பிரதமர் கேப்ரியல் அத்தால் இன்று சனிக்கிழமை Rhône நகருக்கு பயணமாகிறார். அங்கு 150 வரையான விவசாயிகளை சந்திக்கிறார்.
அங்குள்ள 2,400 பேர் வசிக்கும் சிறிய கிராமமான Orliénas இற்கு பயணமாகி, அங்கு வைத்தே விவசாயிகளைச் சந்திக்கிறார். அங்கு காய்கறி பழங்கள் மற்றும் கால்நடை விவசாயிகள் கடந்த சில மாதங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களைச் சந்தித்து அவர்களின் தேவைகள் குறித்து கலந்துரையாட உள்ளார்.
அதைத் தொடர்ந்து, உள்ளூர் அரசியல் தலைவர்களைச் சந்தித்து அவர்களுடன் உணவு அருந்துவார் எனவும் அறிய முடிகிறது.
விவசாய உற்பத்தி பொருட்களின் விலை சந்தைகளில் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், சரியான விலை நிர்ணயிக்கப்படுவதில்லை எனவும் தெரிவித்து விவசாயிகள் சாலை மறியல் உள்ளிட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan