நமீதா கணவரை விவாகரத்து செய்கிறாரா ?

20 தை 2024 சனி 14:49 | பார்வைகள் : 5259
நடிகை நமீதா தனது கணவரை விவாகரத்து செய்ய இருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத்தி மாடலான நமீதா தமிழில் ‘எங்கள் அண்ணா’ படம் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு அதிகளவிலான கிளாமர் கதாபாத்திரங்களிலும் அவர் நடிக்க ஆரம்பித்து தனக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். சினிமாவில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததும் அவர் ஆந்திராவைச் சேர்ந்த வீரேந்திர செளத்ரி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு இரட்டைக் குழந்தைகள் உள்ளது. தற்போது பாஜகவில் உள்ள நமீதா அரசியல், குடும்பம் என கவனம் செலுத்தி வருகிறார். படங்களில் நடிப்பதையும் விட்டு விலகிவிட்டார்.
சேலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நமீதா கணவர் மீது மோசடி வழக்கு தொடர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான நமீதாவுக்கு போதைப்பொருள் கடத்தல் தொழிலதிபருடன் பழக்கம் ஏற்பட்டதாக பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல் ஒன்றில் பேசியுள்ளார். இதுபோன்ற காரணங்களால், நமீதா தன் கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், இதுகுறித்து நமீதா எதுவும் பேசவில்லை.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1