Paristamil Navigation Paristamil advert login

வறுத்த பூண்டு சாப்பிடுவது ரொம்ப நல்லது. அது ஏன் என்று தெரியுமா..?

வறுத்த பூண்டு சாப்பிடுவது ரொம்ப நல்லது. அது ஏன் என்று தெரியுமா..?

20 தை 2024 சனி 15:04 | பார்வைகள் : 1787


பூண்டை வறுக்க, முதலில் பூண்டின் தோலை உறிக்கவும். பின் அதன் மீது சிறிது ஆலிவ் எண்ணெய் ஊற்றி, உப்பு மற்றும் மிளகு தூள் சேர்க்கவும். குறைந்த தீயில் நன்கு வறுத்த பிறகு, ஒன்று முதல் இரண்டு பல் துண்டுகளைச் சாப்பிடலாம்.

சளி, இருமல் மற்றும் காய்ச்சலுக்கு நல்லது: குளிர்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க வறுத்த பூண்டு சாப்பிடுவது நல்லது. இவற்றை சாப்பிடுவதால் சளி, இருமல் மற்றும் காய்ச்சலை பாக்டீரியா மற்றும் வைரஸ்களை உடலில் தங்க அனுமதிப்பதில்லை.

கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது: உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கும் திறன் வறுத்த பூண்டில் உள்ளது. எனவே, தொடர்ந்து சாப்பிடுவது நல்லது. 

நீண்ட காலம் வாழலாம்: பூண்டு சாப்பிடுபவர்கள், நீண்ட காலம் வாழ்வதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. மேலும் இது அறிகுறிகளைக் குறைக்கும் சக்தியை கொண்டுள்ளது.

இரத்த அழுத்தம் அதிகரிக்காது: மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களுக்கு உயர் இரத்த அழுத்தமே முக்கிய காரணம். பூண்டில் உள்ள கலவைகள் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.


 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்