Paristamil Navigation Paristamil advert login

தமிழ் கலாச்சாரத்தை அழிக்க திமுக முயற்சி: அண்ணாமலை

தமிழ் கலாச்சாரத்தை அழிக்க திமுக முயற்சி: அண்ணாமலை

20 தை 2024 சனி 15:33 | பார்வைகள் : 1339


தமிழ் கலாச்சாரத்தை அழிக்க திமுக முயற்சி செய்கிறது என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாநிலப் பாடலாக திமுக அரசு அறிவித்ததோடு, பாடலை 55 வினாடிகளில், முல்லைப்பாணி (மோகன) ராகத்தில் பாட வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டிருந்தது.

ஆனால் நேற்றைய தினம், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் துவக்க விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை சுமார் 90 வினாடிகள் பாடியதோடு மட்டுமல்லாமல், மேற்கத்திய இசை வடிவில் பாடியது வன்மையான கண்டனத்துக்குரியது.

விளம்பர அரசியலுக்காக அறிவிப்புகள் வெளியிட்டு விட்டு, பின்னர் அவற்றைப் பின்பற்ற முடியாமல் தாங்களே அவற்றை மீறுவது திமுகவின் வழக்கமாகியிருக்கிறது. பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில், மேற்கத்திய இசை வடிவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது, தமிழ்  கலாச்சாரத்தை அழிக்க திமுக செய்யும் மற்றுமொரு முயற்சியாகவே கருதப்படும். 

இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்