Paristamil Navigation Paristamil advert login

கணவன், மனைவிக்கு இடையே விவாகரத்து என்ற பேச்சுக்கே இடமிருக்காது!

 கணவன், மனைவிக்கு இடையே விவாகரத்து என்ற பேச்சுக்கே இடமிருக்காது!

27 ஆடி 2023 வியாழன் 07:25 | பார்வைகள் : 3731


திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதிலும் நம்முடைய முன்னோர்கள் வாழ்நாள் முழுவதும் விட்டுக்கொடுக்காமல் வாழ்வதைப் பார்க்கும் போதே நமக்கு பொறாமையாக இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் திருமணமாகி ஒரு ஆண்டிற்குள்ளாகவே இளம் தலைமுறையில் உள்ள கணவன் மற்றும் மனைவிகளுக்கு இடையே வெறுமை ஏற்பட்டு வருகிறது. 

இயந்திர உலகத்தில் இருவரும் பணிக்கு செல்வதால் பேசுவதற்கு நேரமில்லை, இதோடு கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் சோசியல் மீடியாக்களில் தான் செலவிடும் சூழல் உள்ளது.

இப்படி வாழ்க்கையில் ஒட்டுதல் இல்லாமல் பேசாமல் பிரியும் போது தான், நிரந்தரப் பிரிவு ஏற்படுவதோடு விவாகரத்து வரை நம்மைக் கொண்டு செல்கிறது. இதுபோன்ற நிலைமையை இளம் தலைமுறை தம்பதியினர் சந்திக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? வாழ்நாள் முழுவதும் மகிழ்வானத் தம்பதியினராக மாற என்ன செய்ய வேண்டும் என்பது? குறித்து இங்கே தெரிந்துக் கொள்வது அவசியமான ஒன்று.

வாழ்நாள் முழுவதும் தம்பதியினர் சந்தோஷமாக வாழ்வதற்கான ரகசியங்கள்: பொதுவாக இன்றைய தலைமுறை தம்பதியினர் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று கடந்த கால காதல் அல்லது பிரச்சனைகளைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசிக்கொள்வது. எனவே உங்களது பார்ட்னருடன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் அற்பமாக இருக்காதீர்கள். கடந்த கால பிரச்சனைகளைப் பற்றி கவலைக் கொள்ளாமல் நிகழ்காலத்தில் நடக்கும் நல்ல விஷயங்களுக்கு மதிப்பளியுங்கள் போதும்.

தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேறுவதற்கு ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருக்கப் பழகுங்கள். உன்னால் நிச்சயம் சாதிக்க முடியும் என்று தன்னம்பிக்கைக் கொடுங்கள்.

எப்போதும் உங்களது லைப் பார்டனருடன் கோபமாக இருக்காதீர்கள். உங்களது மனைவியோ அல்லது கணவதோ? என்ன சொல்ல வருகிறார்கள்? என்ற காது கொடுத்து கேளுங்கள். தொடர்ச்சியாக நீங்கள் கோபமாக பேசினால் நிச்சயம் அடுத்தமுறை எதையும் சொல்ல மாட்டார்கள்.
குடும்ப வாழ்க்கையில் எந்த ஒரு விஷயத்தையும் ஆண், பெண் இருவர் இணைந்து, ஆலோசித்து முடிவெடுப்பது நல்ல விஷயம் தான். ஆனால், சில சமயம் உங்கள் கருத்துக்களுக்கு அங்கு இடமில்லாமல் போகும். உங்கள் வாழ்க்கை துணை என்ன முடிவு செய்கிறார்களோ அதுவே உங்கள் முடிவாக மாறிப்போகும்

ஒருவருக்கொருவர் உங்களது அன்பையும், அக்கறையையும் அதிகம் வெளிப்படுத்துங்கள். உணர்வுகளுக்கு மதிப்பளித்து உங்களது திருமண வாழ்க்கையை வெற்றிக்கரமாக்குவதற்கு முயலுங்கள்.

இருவருக்கும் இடையே எப்போதும் போட்டி வேண்டாம். குடும்பத்திற்காக தான் செய்கிறேன் என நினைத்துக் கொள்ளுங்கள். இதில் யார் அதிகம் செய்கிறார்கள் என்ற சண்டை வேண்டாம்.

கணவன் மற்றும் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் நடந்த நிகழ்வுகளைப் பகிர்ந்துக் கொள்ளுங்கள். நிச்சயம் இதை பலமுறைக் கேட்டிருப்பீர்கள்.. ஆனாலும் பரவாயில்லை.. புதிதாகக் கேட்பது போன்ற கேட்கத் தொடங்குங்கள். நிச்சயம் இருவருக்கும் மன நிம்மதி கிடைக்கும். குறிப்பாக இருவரும் நகைச்சுவையாக பேசி சிரிப்பது உங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கும்.

நீங்கள் ஏதாவது ஒரு விஷயத்திற்காக சண்டை போட்டிருக்கலாம். ஆனால் உங்களது சண்டையை நீடிக்காதீர்கள். குறிப்பாக இரவு தூங்கச் செல்வதற்கு முன்னதாக உங்களது சண்டையை முடித்துக் கொள்ளுங்கள். இது நிச்சயம் நீண்ட கால உறவிற்கு உறுதுணையாக இருக்கும்.

முக்கியமாக கணவன் மற்றும் மனைவி இருவரும் எப்போதும் நண்பர்களாக இருக்க வேண்டும். நண்பர்கள் போல் சண்டைப் போடுவது, விளையாடுவது போன்ற விஷயங்களைத் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் போது உங்களுடைய புரிதல் மேலும் வலுப்பெறும்.

இதுபோன்ற விஷயங்களை நீங்கள் தொடர்ச்சியாகக் கடைப்பிடித்து வந்தாலே வாழ்நாள் முழுவதும் சந்தோஷமான தம்பதியினராக இருக்க முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்