Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் கடும்  பனிப்புயல்....50 பேர் பலி.. 

அமெரிக்காவில் கடும்  பனிப்புயல்....50 பேர் பலி.. 

21 தை 2024 ஞாயிறு 09:16 | பார்வைகள் : 3693


அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக இடைவிடாத புயல்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன

இந்த பனிப்புயல் காரணமாக அமெரிக்காவின் பல மாநிலங்களில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

குளிர் காற்று, குறைந்த வெப்பம், அடர்ந்த பனி போன்றவற்றால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

சாலைகளில் பனிப்பொழிவு பெரும் விபத்துகளை ஏற்படுத்தியுள்ளது. வானிலை எச்சரிக்கை காரணமாக பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன மற்றும் பள்ளிகள் மூடப்பட்டன.

தென்கிழக்கு மாநில சுகாதாரத் துறை Tennesseeயில் வானிலை தொடர்பான 14 இறப்புகளை உறுதிப்படுத்தியுள்ளது.

அதேநேரம், மெக்காவுக்கு புனித யாத்திரை சென்று வீடு திரும்பிய ஐந்து பெண்கள் பென்சில்வேனியா நெடுஞ்சாலையில் tractor மற்றும் trailer விபத்தில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Kentuckyல் ஐந்து பேர் இறந்துள்ளனர் என்று கவர்னர் ஆண்டி பெஷியர் வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

Oregon மாநிலத்தில், பனிப்புயலின் போது, ​​நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மின்கம்பி விழுந்ததில், புதன்கிழமை மின்சாரம் தாக்கி மூன்று பேர் உயிரிழந்ததாக போர்ட்லேண்ட் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

புயல் காரணமாக ஓரிகானில் சுமார் 75,000 பேர் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். அந்த மாநில கவர்னர் அவசர நிலையை அறிவித்தார்.

Illinois, Kansas, New Hampshire, New York, Wisconsin மற்றும் Washington மாநிலங்களிலும் இறப்புகள் பதிவாகியுள்ளன.

அமெரிக்காவின் Pacific Northwest, Rocky Mountains மற்றும் New Englandன் சில பகுதிகள், குறிப்பாக மேற்கு New Yorkன் சில பகுதிகளில் பனிப் புயல் பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாக வானிலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வார இறுதியில் நாட்டின் சில பகுதிகள் மோசமான நிலைமைகளை சந்திக்கும் என வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்