Paristamil Navigation Paristamil advert login

'ஜெயிலர் 2' படத்தில் நயன்தாரா?

 'ஜெயிலர் 2' படத்தில் நயன்தாரா?

21 தை 2024 ஞாயிறு 10:56 | பார்வைகள் : 5308


ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவான ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் 600 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ‘ஜெயிலர் 2’ படம் விரைவில் உருவாகும் என்று செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் லோகேஷ் கனகராஜ் படத்தை முடித்த பிறகு ரஜினிகாந்த் ‘ஜெயிலர் 2’ படத்தில் இணைவார் என்று கூறப்படுகிறது.

ஜெயிலர்’ முதல் பாகத்தில் சிலை கடத்தல் காரர்களிடம் தனது மகன் சிக்கி இருந்த நிலையில் அவரை மீட்டு அதன் பின் மகனையே கொலை செய்வதுடன் படம் முடிந்திருக்கும்.

இந்த நிலையில் இரண்டாவது பாகத்தில் சிலை கடத்தல்காரர்களிடம் ரஜினிகாந்த் மோதும் காட்சிகளும் அவர்களை முழுவதுமாக அழிக்கும் கதை அம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது

அது மட்டும் இன்றி நெல்சன் இயக்கத்தில் உருவான ’கோலமாவு கோகிலா’ படத்தின் சில கேரக்டர்களும் ‘ஜெயிலர் 2’ படத்தில் இணையும் என்றும் குறிப்பாக நயன்தாரா இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே ‘ஜெயிலர் 2’படம் நெல்சனின் யுனிவர்ஸ் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்