புதிய தலைவரான சிறிதரன் எம்.பி - சித்தார்த்தன் வழங்கிய அறிவுரை
21 தை 2024 ஞாயிறு 16:14 | பார்வைகள் : 1853
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவிற்கான தேர்தல் இடம்பெற்று முடிந்துள்ள நிலையில், எதிர்காலத்தில் அந்தக் கட்சி ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனுக்கு அவர் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சி நீண்ட கால பாரம்பரியம் கொண்ட, தமிழ் தேசியத்தின் ஆணிவேராக இருந்த கட்சியாகும். இதுவரையிலும், அந்த கட்சியின் தலைவராக பலர் செயற்பட்டுள்ளனர்.
தமிழரசுக் கட்சியின் வரலாற்றில் முதல் முறையாக தேர்தல் ஒன்றின் மூலம் தலைவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தலைவர் பதவி தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது மன முறிவுகள் ஏற்பட்டுள்ளன. இது தமிழ் தேசிய உணர்வுகளுக்கு சிறந்த ஒன்றாக தெரியவில்லை. தமிழரசு கட்சி ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என்பது முக்கியமான ஒன்றாகும்.
கட்சிகளுக்குள்ளே காணப்படும் பிளவு ஒன்றுமையைக் கொண்டுவராது. எனவே புதிய தலைவர் யதார்த்தமான முறையில் செயற்பட வேண்டும். அனைத்து தரப்பினர்களையும் ஒன்றிணைத்து செயற்பட வேண்டும்.” என அவர் வலியுறுத்தியுள்ளார்.