குடிவரவு சட்டத்திருத்தம்! - பரிசில் ஆர்ப்பாட்டம் - 16,000 பேர் பங்கேற்ப்பு!!
21 தை 2024 ஞாயிறு 17:48 | பார்வைகள் : 5217
குடிவரவு சட்டத்திருத்தத்ததினை கண்டித்து பரிசில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
ஜனாதிபதி மக்ரோனின் அரசாங்கம் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் குடிவரவு சட்டத்தை அண்மையில் நிறைவேற்றியிருந்தது. பிரான்சுக்குள் நுழையும் அகதிகள் மீது பல்வேறு கட்டுப்பாடுகளைக் விதிக்கும் இந்த புதிய சீர்திருத்தம் பாராளுமன்றத்தில் ஏற்கப்பட்டு, செனட் சபையினராலும் அனுமதிக்கப்பட்டது.
இன்னும் நான்கு நாட்களில் (ஜனவரி 25) பிரெஞ்சு அரசியலமைப்புச் சபை ( Conseil constitutionnel) இதனை பிரெஞ்சு சட்டப்புத்தகத்தில் இணைக்க உள்ளது. இந்நிலையிலேயே இந்த சட்டத்திருத்தத்தைக் கண்டித்து பரிசில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
காவல்துறையினர் தெரிவித்த தகவலின் படி இந்த ஆர்ப்பாட்டத்தில் 16,000 பேர் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 25,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்ததாக CGT தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர். Place du Trocadéro பகுதியில் குவிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறை எதுவும் இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.