Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் மூடப்பட்ட தொழிற்சாலைகள் - வேலையின்மை வீதம் உயர்வு

இலங்கையில் மூடப்பட்ட தொழிற்சாலைகள் - வேலையின்மை வீதம் உயர்வு

22 தை 2024 திங்கள் 03:42 | பார்வைகள் : 1345


இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடி காரணமாக, கடந்த ஆண்டு (2023) இரண்டாம் காலாண்டில் நாட்டில் வேலையின்மை விகிதம் 5.2 வீதமாக அதிகரித்துள்ளதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கையில் வேலையின்மை விகிதம் 4.7 வீதமாக இருந்தது, இரண்டாவது காலாண்டில், அது 5.2 வீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த வருடத்தின் இரண்டாம் காலாண்டில் அனைத்து வயதினரையும் விட இளம் வயதினரின் (15-24 வயது) வேலையின்மை விகிதம் 25.8 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2023ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 48.6 வீதமாகக் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2019ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் ஏற்பட்ட கோவிட் தொற்றின் பின்னர், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் இலங்கையின் அந்நிய செலாவணி பற்றாக்குறை ஏற்பட்டது.

இதனால் இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுடன், பல்வேறு தொழிற்சாலைகள் மூலப்பொருள் பற்றாக்குறை காரணமாக மூடவேண்டிய நிலைக்கும், வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்ன.

இதனால் பலர் தமது தொழிலை இழந்ததுடன், நிறுவனங்களில் ஏற்படும் செலவுகளை கட்டுப்படுத்த ஊழியர்களை வேலையில் இருந்து நிறுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்