Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் பதற்றம் - 5 பேர் சுட்டுக்கொலை

இலங்கையில் பதற்றம் - 5 பேர் சுட்டுக்கொலை

22 தை 2024 திங்கள் 04:55 | பார்வைகள் : 1383


மாத்தறை - பெலியத்தை பகுதியில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தங்காலை, பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் 4 சடலங்கள் காணப்படுவதுடன், ஒருவரின் சடலம் தங்காலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8.30 மற்றும் 8.40 க்கு இடையில், பச்சை நிற கெப் வண்டியில் வந்த குழு ஒன்று வெள்ளை டிபென்டர் காரில் பயணித்த 5 பேரை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

தங்காலை, பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் தங்காலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்