Paristamil Navigation Paristamil advert login

வரலாற்றில் முதல் முறையாக இலங்கை செல்லும் பிரான்ஸ் ஜனாதிபதி

வரலாற்றில் முதல் முறையாக இலங்கை செல்லும் பிரான்ஸ் ஜனாதிபதி

27 ஆடி 2023 வியாழன் 08:49 | பார்வைகள் : 3503


பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன்(Emmanuel Macron) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

பப்புவா நியூ கினியாவிற்கான தமது விஜயத்தை நிறைவு செய்த பின்னர் இலங்கைக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாளை(28) இரவு பப்புவா நியூ கினியாவிலிருந்து புறப்பட்டு நாளை மறுதினம்(29) காலை இலங்கை சென்றடையவுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வரலாற்றில் பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்த விஜயம் தொடர்பில் முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

வனுவாட்டு தீவுகளுக்கு இன்று(27) விஜயம் மேற்கொள்ளவுள்ள அவர் பின்னர் பப்புவா நியூ கினியாவிற்கு பயணிக்கவுள்ளார்.

பசுபிக் தீவுகளுக்கு அவர் விஜயம் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்