அயோத்தியில் குவிந்த கிரிக்கட் பிரபலங்கள்
 
                    22 தை 2024 திங்கள் 11:18 | பார்வைகள் : 4978
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற உள்ள நிலையில், விராட் கோலி, சச்சின் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெரும் சர்ச்சைக்கு மத்தியிலும், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியிலும் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது. ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி நிறுவ உள்ளார்.
இந்த நிகழ்வில் பங்கேற்க கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி, செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட முக்கிய விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதோடு, விராட் கோலி, ரோஹித் சர்மா, சுனில் கவாஸ்கர், சவுரவ் கங்குலி, அனில் கும்ப்ளே, ரவிசந்திரன் அஸ்வின், வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங், ராகுல் டிராவிட் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில், ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள இந்திய அணியின் நட்சத்திர வீரர் Virat Kohli அயோத்திக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரது Range Rover கார் அயோத்தியில் இருப்பதாக வீடியோக்கள் பரவி வருகிறது.
அதுமட்டுமல்லாமல், Sachin Tendulkar, Ravindra Jadeja மற்றும் Anil Kumble ஆகியோரும் அயோத்திக்கு வந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. அயோத்தி விமான நிலையத்தில் Anil Kumble காணப்பட்டதாக புகைப்படங்களும் பரவின.
மேலும், அயோத்தி வந்துள்ள இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை Saina Nehwal கூறுகையில், "இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம். பல வருடங்களுக்கு பிறகு இந்த நிகழ்வை பார்க்கிறோம்" என்றார்.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று






 சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
        சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan