Paristamil Navigation Paristamil advert login

 டொனெட்ஸ்க் நகரின் மீது எறிகணை தாக்குதல் - 27 பேர் பலி

 டொனெட்ஸ்க் நகரின் மீது எறிகணை தாக்குதல் - 27 பேர் பலி

22 தை 2024 திங்கள் 11:40 | பார்வைகள் : 5436


ரஷ்யா ஆக்கிரமித்துள்ள டொனெட்ஸ்க் நகரின் மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணை தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மிகவும் மும்முரமான சந்தையில் பயங்கரமான தாக்குதல் இடம்பெற்றுள்ளது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என பிராந்தியத்தின் ரஸ்ய சார்பு தலைவர் டெனிஸ் புஸ்சிலின் தெரிவித்துள்ளார். அவர் உக்ரைனே இந்த தாக்குதலை மேற்கொண்டது என குற்றம்சாட்டியுள்ளார்.

எனினும் அந்த பகுதியில் செயற்படும் உக்ரைன் இராணுவத்தினர் இதனை நிராகரித்துள்ளனர்.

அழிக்கப்பட்ட கடைகளையும் அவற்றின் முன்னால் சடலங்களையும் காண்பிக்கும் படங்களை ரொய்ட்டர் வெளியிட்டுள்ளது.

எறிகணைவருவதை சத்தத்தின் மூலம் அறிந்துகொண்ட நான் கடைக்குள் பதுங்கிக்கொண்டேன் என உயிர்பிழைத்த பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.

புகைமண்டலத்தையும் மக்கள் அலறுவதையும் பெண் ஒருவர் அழுவதையும் பார்த்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்