Paristamil Navigation Paristamil advert login

கோயிலில் அனுமதி மறுப்பு: சாலையில் தர்ணாவில் ஈடுபட்ட ராகுல்

கோயிலில் அனுமதி மறுப்பு: சாலையில் தர்ணாவில் ஈடுபட்ட ராகுல்

22 தை 2024 திங்கள் 11:41 | பார்வைகள் : 2319


அசாமில் கோயிலில் வழிபாடு நடத்த காங்கிரஸ் எம்.பி ராகுலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சாலையில் தர்ணாவில் ஈடுபட்ட ராகுல், நான் என்ன குற்றம் செய்தேன் ? என கேள்வி எழுப்பினார்.

லோக்சபா தேர்தலையொட்டி, மணிப்பூர் முதல் மும்பை வரையிலான இரண்டாம் கட்ட 'பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை'யை காங்கிரஸ் எம்.பி., ராகுல் கடந்த ஜன.,14ம் தேதி மணிப்பூரில் துவக்கினார். அதன் படி, இன்று(ஜன.,22) ராகுல் அசாம் மாநிலத்தில் நகோன் நகரில் மேற்கொண்டார்.

அனுமதி மறுப்பு

அப்போது, அங்கு உள்ள துறவி ஸ்ரீமந்த் சங்கர் தேவ் கோயிலில் வழிபாடு நடத்த ராகுல் சென்றார். அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி ஸ்ரீமந்த் சங்கர் தேவ் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருவதாகக் கூறி ராகுலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் பிற்பகல் 3 மணிக்கு பிறகு கோயிலுக்கு வரும்படி போலீசார் அறிவுறுத்தினர். ஆனால், தான் அனுமதி பெற்ற பிறகே கோயிலுக்கு வந்ததாகக் கூறி போலீசாருடன் ராகுல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ராகுல் பேட்டி

அப்போது செய்தியாளர்களிடம் ராகுல் கூறியதாவது: இன்று ஒருவர் மட்டும் தான் கோயிலுக்கு செல்ல முடியும். கோயிலுக்கு யார் செல்ல வேண்டும்?. எப்போது செல்ல வேண்டும் என்பதை பிரதமர் மோடி தான் முடிவு செய்ய வேண்டுமா?. நான் என்ன குற்றம் செய்தேன் ?. இவ்வாறு அவர் கூறினார்.

தர்ணா

காங்., எம்.பி ராகுல், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் மகளிர் அணியினர் ரகுபதி ராகவ ராஜாராம் பாடலை பாடி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்