Paristamil Navigation Paristamil advert login

X பெருந்தொற்று குறித்து எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு

X பெருந்தொற்று குறித்து எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு

22 தை 2024 திங்கள் 13:35 | பார்வைகள் : 5079


உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்துவதற்கு  எக்ஸ் தொற்று உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எக்ஸ் என மட்டும் குறிப்பிடப்பட்டுள்ள பெருந்தொற்று குறித்து மீண்டும் எச்சரித்துள்ள உலக சுகாதார அமைப்பு, கொரோனாவை விட 20 மடங்கு ஆபத்தானதாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் கெப்ரேயஸ் குறிப்பிடுகையில், உலகெங்கிலும் உள்ள நாடுகள் ஒன்றிணைந்து கொடிய நோயை சமாளிக்க ஒரு தொற்றுநோய் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்றார்.

டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மாநாட்டில் பார்வையாளர்கள் முன்னிலையில் பேசிய அவர், இந்த பொது எதிரிக்கு தீர்வு காண எதிர்வரும் மே மாதத்திற்குள் நாடுகள் ஒரு தொற்றுநோய் உடன்பாட்டை எட்டும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அது எந்த வடிவம், எப்போது தொடங்கும் என்பதை அறிய காத்திருக்காமல், உடனடி நடவடிக்கை தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

கொரோனாவால் நாம் பெரும் எண்ணிக்கையிலான மக்களை இழந்தோம். காரணம் அப்படியான ஒரு நோயை நாம் இதுவரை எதிர்கொண்டதில்லை.

உலக சுகாதார அமைப்பு தனது பணியை துவங்கியுள்ளதாகவும், நிதி திரட்டவும், அந்த நோயால் ஏற்பட வாய்ப்புள்ள பாதிப்பு தொடர்பில் ஆய்வு முன்னெடுக்கவும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்.

எக்ஸ் தொடர்பில் இதுவரை உறுதியான தரவுகள் ஏதும் இல்லை.

கொரோனா தொற்றை விடவும் ஆபத்தானதாக இருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது. மட்டுமின்றி 2018ல் இருந்தே எக்ஸ் தொற்று தொடர்பில் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்