A64 நெடுஞ்சாலையை முடக்கிய விவசாயிகள்! - அவர்களை வெளியேற்றப்போவதில்லை என உள்துறை அமைச்சர் தெரிவிப்பு!!

22 தை 2024 திங்கள் 14:52 | பார்வைகள் : 8485
நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களின் உழவு இயந்திரத்தினை A64 நெடுஞ்சாலையில் நிறுத்தி வீதி போக்குவரத்து தடையினை உருவாக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Toulouse தொடக்கம் Bayonne (Haute-Garonne) நகரங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகிறது. மிக நீண்ட தூரத்துக்கு போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
வரி உயர்வைக் கண்டித்தும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாய உற்பத்திப் பொருட்களின் விலை நிர்ணயம் போதுமானதாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், சற்று முன்னர் ஊடகங்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் Gérald Darmanin , “நான் அவர்களை வெளியேற்றப்பணிக்கவில்லை. மாறாக அவர்கள் தங்களது பொறுப்பினை உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025