Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : படகில் அமைக்கப்பட்டிருந்த உணவகம் தீக்கிரை!!

பரிஸ் : படகில் அமைக்கப்பட்டிருந்த உணவகம் தீக்கிரை!!

23 தை 2024 செவ்வாய் 06:26 | பார்வைகள் : 8236


படகில் அமைக்கப்பட்டிருந்த உணவகம் ஒன்று Quai de la Rapée பகுதியில் பயணித்திருந்த நிலையில் திடீரென தீ விபத்துக்குள்ளானது.

ஜனவரி 22 ஆம் திகதி நேற்று திங்கட்கிழமை, இரவு 9.30 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. படகில் அமைக்கப்பட்ட மதுபான விடுதி மற்றும் கதிரை மேசைகள் அமைக்கப்பட்டிருந்த மேற் தளம் என படகி தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு தீ கட்டுப்படுத்தப்பட்டது.

சம்பவத்தின் போது எவரும் படகில் இருக்கவில்லை எனவும், இதனால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்