Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டு  - 8 பேர்  பலி

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டு  - 8 பேர்  பலி

23 தை 2024 செவ்வாய் 07:54 | பார்வைகள் : 8443


அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் ஜுலியட் பகுதியில் செவ்வாய்க்கிழமை 22 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இரண்டு வீடுகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ரோமியோ நான்சி என்ற நபர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக தகவல் வெளியாகின. மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய ரோமியோ நான்சியை தீவிரமாக தேடி வருகின்றனர்.


 

வர்த்தக‌ விளம்பரங்கள்