Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் மீது  அமெரிக்காவும் பிரிட்டனும் தாக்குதல் 

மீண்டும் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் மீது  அமெரிக்காவும் பிரிட்டனும் தாக்குதல் 

23 தை 2024 செவ்வாய் 08:18 | பார்வைகள் : 3025


யேமனில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகளை இலக்குவைத்து அமெரிக்காவும் பிரிட்டனும் மீண்டும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நிலத்தடி சேமிப்பகங்கள் அவர்களின் ஏவுகணை மற்றும் கண்காணிப்பு நிலைகள் மீது எட்டுக்கும் மேற்பட்ட தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

ஹெளத்திகிளர்ச்சியாளர்களிற்கு எதிராக அவசியமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக கூட்டறிக்கையொன்று தெரிவித்துள்ளது.

செங்கடலில் பதற்றத்தை தணித்து  இயல்புநிலையை உருவாக்குவதே எங்களின் நோக்கம்.

 உலகின் மிகவும் முக்கியமான நீர்நிலையில் தொடர்ந்தும் அச்சுறுத்தல் காணப்படுகின்ற நிலையில் உயிர்களையும் சுதந்திரமாக வர்த்தகம் நடைபெறுவதையும் பாதுகாக்க நாங்கள் தயங்கமாட்டோம் என்ற எங்களின் எச்சரிக்கையை ஹெளத்தி தலைமைத்துவத்திற்கு மீண்டும் தெரிவித்துக்கொள்கின்றோம் என அமெரிக்காவும் பிரிட்னும் தெரிவித்துள்ளன.

யேமனில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது அமெரிக்கா மேற்கொண்டுள்ள எட்டாவது தாக்குதல் இது .பிரிட்டனுடன் இணைந்து மேற்கொண்ட இரண்டாவது தாக்குதல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

யுஎஸ்எஸ் ஐஸ்னோவரிலிருந்து சென்ற விமானங்களே தாக்குதலை மேற்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்