சந்திரயான் -3 - விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொண்ட நாசா
23 தை 2024 செவ்வாய் 08:43 | பார்வைகள் : 2186
இந்தியாவின் முயற்சியால் நிலவில் செலுத்தப்பட்ட சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை அமெரிக்க விண்கலம் தொடர்புக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் -3 விண்ணில் செலுத்தியது.
இந்த விண்கலனானது பூமியிலிருந்து சுமார் ஒரு மாதக்காலம் பயணத்தை மேற்க்கொண்டு தரையிறக்கம் செய்யப்பட்டது.
சந்திரயான் -3 : விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொண்ட நாசா | Vikram Lander Chandrayaan 3 Gets Pinged By Nasa
அதையடுத்து தனது பணியையும் வெற்றிகரமாக செய்து வந்தது. நிலவின் காலநிலை மாற்றத்தின் காரணமாக விக்ரம் லேண்டர் உறக்க நிலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பிறகு சந்திரயான் பற்றிய எந்தவொரு தகவலும் இஸ்ரேலுக்கு கிடைக்கவில்லை.
இந்நிலையில் சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை அமெரிக்க விண்கலம் தொடர்புக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நாசாவின் ஆா்பிட்டா் கடந்த ஆண்டு டிசம்பா் 12-ஆம் திகதி நிலவின் தென் துருவத்தைக் கடக்கும்போது, விக்ரம் லேண்டரில் இடம்பெற்றுள்ள சிறிய துண்டு அளவிலான லேசா் கருவியுடன் தொடா்பை ஏற்படுத்தியுள்ளது.
விக்ரம் லேண்டருடனான தொடா்பை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனா்.
இந்த லேசா் கதிா்வீச்சை அனுப்பும்போது நாசா ஆா்பிட்டருக்கும், விக்ரம் லேண்டருக்கும் 100 கி.மீ. தொலைவு இருந்ததாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
எதிா்மறையாக நகா்ந்துகொண்டிருக்கும் ஆா்பிட்டரிலிருந்து, நிலவின் பரப்பில் நிலையாக இருக்கும் லேண்டா் மீது லேசா் கதிா்வீச்சை அனுப்பி நாசா விஞ்ஞானிகள் தற்போது சாதனை படைத்துள்ளனா்.
மேலும் கதிா்வீச்சை அனுப்பும் கருவியானது எந்தவித பராமரிப்பும், மின்சாரமும் இன்றி பல ஆண்டுகளுக்குச் செயல்படும். இந்தத் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, எதிா்கால தொடா் பயன்பாட்டுக்கு உகந்ததாக உருவாக்கப்படும் என்று நாசா விஞ்ஞானி ஷியோலி சுன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.