Paristamil Navigation Paristamil advert login

உயரத்தை அதிகரிக்க ரூ.1.46 கோடி செலவு செய்து சர்ஜெரி..

உயரத்தை அதிகரிக்க ரூ.1.46 கோடி செலவு செய்து சர்ஜெரி..

23 தை 2024 செவ்வாய் 08:55 | பார்வைகள் : 1643


உயரத்தை அதிகரிக்க அறுவை சிகிச்சை செய்த இளைஞர் ஒருவர் தற்போது பல பிரச்சனைகளையும், வலியையும் சந்தித்து வருகிறார்.

தற்போதைய காலத்தில் பலரும் நம்மை அழகாக காட்டுவதற்காக அறுவை சிகிச்சைகள் செய்து வருகின்றனர். குறிப்பாக கண்கள், மூக்கு, இடுப்பு ஆகியவற்றை அழகாக காண்பிப்பதற்காக அறுவை சிகிச்சை செய்கின்றனர்.

இப்படி செய்யும் அறுவை சிகிச்சை எல்லாம் வெற்றியடைவதில்லை. சில பேருக்கு பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. சில பேர் இதனால் உயிரிழக்கின்றனர். அதனை நான் சமீபத்தில் வெளிவந்த செய்திகளில் பார்த்திருப்போம். அப்படி தான் இளைஞர் ஒருவர் உயரத்தை அதிகரிக்க வேண்டுமென பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.

கொலம்பியாவில் உள்ள 29 வயது இளைஞர் ஜெபர்சன் கோசியோ. இவரது உயரம் முதலில் 5 அடி 8 அங்குலம்தான் இருந்துள்ளது. இவர் தனது உயரத்தை அதிகரிக்க 4 மாதங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்து 6 அடியாக மாற்றியதாக தனது சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார்.

இதற்காக ஜெபர்சன் சுமார் 1.46 கோடி ரூபாய் செலவிட்டதாக கூறியுள்ளார். ஆனால், அதன்பிறகு தான் அவருக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பிறகு வலி தீரவில்லை. இரவு மாத்திரை போட்டு தூங்கினாலும் தூக்கம் வரவில்லை .

இதனால் அவர் வலியை போக்குவதற்காக மற்றொரு அறுவை சிகிச்சை செய்யவுள்ளார். அதுமட்டுமல்லாமல், தசைகள் மற்றும் எலும்புகளை இணைக்கும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. இந்த அறுவை சிகிச்சை வரும் 25 -ம் திகதி நடைபெற இருப்பதாக ஜெபர்சன் கூறியுள்ளார்.

இது குறித்து சுகாதார வல்லுநர்கள் கூறுகையில், "அழகுக்காக நீங்கள் செய்யும் விடயம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அழகுக்கு பின்னால் ஓடாதீர்கள்" என்று கூறியுள்ளனர்.     
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்