SAMU மருத்துவக்குழுவினரின் அலட்சியத்தால் பறிபோன உயிர்!!
23 தை 2024 செவ்வாய் 10:27 | பார்வைகள் : 8137
SAMU அவசரகால மருத்துவத்துறையினரின் அலட்சியம் காரணமாக வீடற்றவர் ஒருவரின் (SDF) பறிபோயுள்ளது.
சனிக்கிழமை இரவு Créteil (Val-de-Marne) நகரில் வீதியில் படுத்துறங்கிய வீடற்றவர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டது. காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து அவர்கள் குறித்த நபரின் சடலத்தை மீட்டு Henri-Mondor மருத்துவமனையில் சேர்த்தனர். குளிரில் உறைந்து அவர் சில நிமிடங்களுக்கு முன்னர் பலியானதாக மருத்துவ ஆய்வில் தெரியவந்தது.
இந்நிலையில், அவர் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக, Samu மருத்துவக்குழுவினருக்கு அழைப்பு எடுத்துள்ளார். ஆனால் அந்த அழைப்பில் போதிய உதவி கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலின் வெப்ப நிலை 27°C ஆக குறைவடைந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதையடுத்து, Créteil நகர வழக்கறிஞர் அலுவலகம் மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு பிரான்சில் குளிர்காலத்தின் போது 624 வீடற்றவர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Coupons
Annuaire
Scan