போலி காவல்துறையினர், போலி திருத்துனர்கள் - இல் து பிரான்சுக்குள் அதிகரித்துள்ள கொள்ளைகள்!!
23 தை 2024 செவ்வாய் 10:42 | பார்வைகள் : 3204
காவல்துறையினர் போன்று வேடமணிந்து அல்லது திருத்துணர்கள் போன்று வேடமணிந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவது இல் து பிரான்சுக்குள் அதிகரித்துள்ளது.
இல் து பிரான்ஸ் மாகாண ஜொந்தாம் அதிகாரிகள் இது தொடர்பில் தெரிவிக்கையில், 'இல் து பிரான்சுக்குள் இடம்பெறும் திருட்டுக்களில் மூன்றில் இரண்டு இது போன்று இடம்பெறுகிறது!' என குறிப்பிட்டனர்.
2023 ஆம் ஆண்டில் Yvelines, Val-de-Marne, Val d'Oise மற்றும் Seine-et-Marne மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட திருட்டுக்கள் இதுபோல் பதிவாகியுள்ளன. குறிப்பாக கடந்த ஜனவரி மாதத்தில் மிக அதிகளவு திருட்டுக்கள் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச்செயலில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், €100,000 குற்றப்பணமும் அறவிடப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.