Paristamil Navigation Paristamil advert login

‘எதிர்நீச்சல்’ நடிகை விஜய் படத்தில் இணைந்தாரா ?

‘எதிர்நீச்சல்’ நடிகை விஜய் படத்தில் இணைந்தாரா ?

23 தை 2024 செவ்வாய் 15:00 | பார்வைகள் : 4403


நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் ‘GOAT' படத்தில் ‘எதிர்நீச்சல்’ நடிகை இணைந்தாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.நடிகர் விஜய் வெங்கட்பிரபு இயக்கத்தில் தற்போது ‘GOAT' படத்தில் நடித்து வருகிறார். இதில் நடிகர்கள் மீனாட்சி செளத்ரி, சிநேகா, லைலா, மோகன், ஜெயராம், பிரபுதேவா, பிரஷாந்த் எனப் பலரும் நடித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகையை ஒட்டி விஜய், பிரஷாந்த், பிரபுதேவா மூவரும் இருக்கும்படியான புதிய போஸ்டர் ஒன்றும் வெளியானது.

படத்தில் நடிகர் விஜய் அப்பா-மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்காக, அமெரிக்காவில் வயதைக் குறைத்துக் காட்டும் டீஏஜிங் தொழில்நுட்பமும் முயற்சி செய்திருக்கிறார்கள். இப்படியான சூழ்நிலையில் இணையத்தில் வெளியான ஒரு புகைப்படம்தான் ரசிகர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரக்கூடிய ‘எதிர்நீச்சல்’ சீரியல் ரசிகர்களுக்குப் பிடித்த ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் நடிகை கனிகாவும் நடித்து வருகிறார். இவர் தற்போது வெங்கட்பிரபுவுடன் இணைந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதுதான் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவர், ‘GOAT' படத்தில் நடிக்கிறாரா அல்லது படத்திற்கு எதுவும் டப்பிங் கொடுத்திருக்கிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்