பாரிஸ் போக்குவரத்து சேவையில் (RATP) வேலை வாய்ப்பு. அதன் தலைவர் Jean Castex அழைப்பு.

23 தை 2024 செவ்வாய் 18:24 | பார்வைகள் : 8776
இன்று செவ்வாய்க்கிழமை (24/01) பாரிஸ் போக்குவரத்து துறையின் (RATP) தலைவரும் முன்னாள் பிரதமருமான Jean Castex அவர்கள் சுமார் 5.300 வேலைவாய்புளுக்கான அழைப்பை விடுத்துள்ளார். கடந்த ஆண்டு (2023) 6.600 புதிய பணியாளர்கள் புதிதாக வேலைகளுக்கு அமர்த்தப்பட்டு அவர்களுக்கான பயிற்சிகள் இரவு பகலாக நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக் போட்டிகளின் போது ஏற்பட இருக்கும் நெரிசல்களை தவிர்க்கவும், தரமான போக்குவரத்து வசதிகளை வழங்கவும் இந்த புதிய வேலைவாய்ப்பு தெரிவுகள் இடம் பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அவரவர் திறமைக்கு ஏற்ப விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம் எனவும், அனுப்பி வைக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அவர்களுக்கான நேர்முக பரீட்சைகள் இடம் பெற்ற பின்னர் பணிகளுக்கான ஒப்பந்தம் அவர்களுக்கு வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலதிகமான தகவல்களை அறிந்து கொள்ளவும், விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளவும் RATP இணையத்தளத்தில் இணைந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1