Paristamil Navigation Paristamil advert login

இலங்கை தனியார் துறையினருக்கு அடிப்படை சம்பளம்  21,000 ரூபாய்

இலங்கை தனியார் துறையினருக்கு அடிப்படை சம்பளம்  21,000 ரூபாய்

24 தை 2024 புதன் 03:50 | பார்வைகள் : 1012


தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை 12,500 ரூபாவிலிருந்து 21,000 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் திறந்த மற்றும் பொறுப்புடைமை அரசாங்கம் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு தொழில் அமைச்சிடம் இருந்து இது தொடர்பான முன்மொழிவு கிடைக்கப்பெற்றுள்ளது.

தனியார் துறை ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை தற்போது தீவிரமாக எழுப்பப்பட்டுள்ளதாகக் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியதுடன், தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதில் தொழிலாளர் அமைச்சின் தலையீடு எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பது குறித்தும் விவரித்துள்ளார்.

தொழில் அமைச்சின் அதிகாரிகள் கருத்து வெளியிடுகையில், தனியார் துறையில் சம்பளம் பெறும் சுமார் 3 மில்லியன் ஊழியர்கள் மட்டுமே தொழிலாளர் சட்டத்தின் கீழ் உள்ளனர். மேலும் தனியார் துறையின் குறைந்தபட்ச ஊதியத்தை 12,500 ரூபாயில் இருந்து 21,000 ரூபாயாக உயர்த்த தொழில் அமைச்சு முன்மொழிந்துள்ளது.‘‘ எனக் கூறியுள்ளார்.

அத்துடன், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1,000 ரூபாயில் இருந்து 1,700 ரூபாவாக அதிகரிக்க தொழில் அமைச்சு முன்மொழிந்துள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் குழு தெரிவித்துள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்