Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் இரட்டை சகோதரிகளைக் காணவில்லை - தீவிரமாக தேடும் பொலிஸார்

இலங்கையில் இரட்டை சகோதரிகளைக் காணவில்லை - தீவிரமாக தேடும் பொலிஸார்

28 ஆடி 2023 வெள்ளி 03:39 | பார்வைகள் : 8537


கடந்த செவ்வாய்க்கிழமையிலிருந்து  15 வயதான இரட்டை சகோதரிகளைக் காணவில்லையென தமக்கு முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளதாக முந்தலம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன இரட்டை சகோதரிகளின் தாயே இவ்வாறு முறைப்பாடு அளித்துள்ளார்.

இந்த சிறுமிகளின் தோழி ஒருவரின் குடும்ப உறுப்பினர்கள் கதிர்காமத்திற்கு புனித யாத்திரை செல்லவிருந்ததாகவும், அவர்களுடன் செல்ல அந்த இரட்டையர்கள் தாயாரிடம் அனுமதி கோரிய நிலையில்  அவர் மறுத்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கதிர்காமம் செல்வதற்காக சிறுமிகள் இருவரும் தாயிடம் 500 ரூபாய் கேட்டதாகவும், தாய் அதைக் கொடுக்கவில்லையெனவும் பெலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதன் பின்னர் குறித்த சிறுமிகள் இருவரும் காணாமல் போயுள்ளதாகவும், நேற்று (26) வரை குறித்த சிறுமிகள் தொடர்பில் எவ்வித தகவலும் தமக்கு கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்