ரம்பா மகள்.. திரையுலகத்திற்கு வருவாரா?
24 தை 2024 புதன் 06:55 | பார்வைகள் : 6301
நடிகை ரம்பாவின் மகள் சமீபத்தில் டீன் ஏஜில் காலடி எடுத்து வைத்த நிலையில் அவரது குடும்பத்தில் நிகழ்ந்த பூஜை ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், அஜித், விஜய், சரத்குமார், கார்த்திக், பிரபு, அர்ஜுன், உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ரம்பா கடந்த 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கை தமிழரான இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் அவர் கணவருடன் கனடாவில் செட்டில் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ரம்பாவின் மூத்த மகள் 2011 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி பிறந்த நிலையில் அவர் தற்போது டீனேஜில் காலடி எடுத்து வைத்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் ரம்பாவின் வீட்டில் நடந்த பூஜை ஒன்றின் புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அதில் ரம்பாவின் மூத்த மகள் பாவாடை தாவணி அணிந்து குமரியாக மாறி உள்ளதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
மேலும் ரம்பாவின் மகள் தமிழ் சினிமாவில் புதிய ஹீரோயினாக வலம் வருவாரா என்ற கேள்வியையும் ரசிகர்களை எழுப்பி வருகின்றனர். அவர் தமிழ் சினிமாவில் நடிப்பாரா? திரையுலகத்திற்கு வருவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan