பெயரை மாற்றிவிட்டாரா விக்னேஷ் சிவன்..?

24 தை 2024 புதன் 06:57 | பார்வைகள் : 4281
விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள எல்.ஐ.சி படக்குழுவுக்கு LIC நிறுவனம் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் படத் தலைப்பை மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகிறது.
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர் அடுத்து லவ்டுடே பிரதீப் ரங்கநாதன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ள படத்தை இயக்குகிறார்.இப்படத்தில் பிரதீப் ரங்க நாதனுக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.
இப்படத்தை அனிருத் இசையமைக்கிறார். 'லியோ' படத்தை தயாரித்த 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு எல்.ஐ.சி(
இந்த நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்திற்கு எல்ஐசி என்று பெயர் வைத்த நிலையில், இப்படக்குழுவுக்கு LIC நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதில், '' LIC: லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் என்ற தலைப்பை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று நோட்டீஸ் பெற்ற 7 நாட்களுக்குள் படத்தின் பெயரை மாற்றவில்லை என்றால் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்று LIC தெரிவித்தது..
இது படக்குழுவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு முன்னதாக எல்ஐசி என்ற இப்படத்தின் பெயரை வைத்தால் வழக்கு தொடர்வேன் என இயக்குனர் குமரன் தெரிவித்திருந்தார். இதனால் இப்படம் ஆரம்பிக்கும்போதே பிரச்சனையா என பேச்சு எழுந்தது.
இந்த நிலையில், இப்படத்தின் தலைப்பு விக்னேஷ் சிவன் மாற்றியுள்ளதாகவும் எல்.சி.சி என்ற தலைப்பு பதிலாக எல்.ஓ.சி என்று வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
சமீபத்தில், இப்படத்தின் ஷூட்டிங் கோவை ஈஷா யோகா மையத்தில் ஜக்கி வாசுதேவ் முன்னிலையில், தொடங்கியது. இதுகுறித்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தன் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், படத் தலைப்பு குறிப்பிடவில்லை.
எனவே அவர் படத்தின் தலைப்பை மாற்றிவிட்டாரா என ரசிகர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.