Paristamil Navigation Paristamil advert login

பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: அமித்ஷாவுக்கு காங்., தலைவர் கார்கே கடிதம்

பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: அமித்ஷாவுக்கு காங்., தலைவர் கார்கே கடிதம்

24 தை 2024 புதன் 09:47 | பார்வைகள் : 3923


பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையில் ராகுலுக்கும், அவரது பயண குழுவினருக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளார். 

கடிதத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியிருப்பதாவது: அசாமில் காங்கிரசாருடன் போலீசார் தள்ளுமுள்ளு நடத்தியுள்ளனர். ராகுல் பிரசார வாகனம் அருகே பா.ஜ.,வினர் வேண்டுமென்றே  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையில் ராகுலுக்கும், அவரது பயண குழுவினருக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். நீங்கள்(அமித்ஷா) உடனே தலையிட்டு அசாம் முதல்வர் மற்றும் டிஜிபிக்கு தகுந்த உத்தரவை வழங்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கார்கே கூறியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்