சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் நாசாவின் 7-வது குழு!
28 ஆடி 2023 வெள்ளி 07:45 | பார்வைகள் : 3336
அமெரிக்க விண்வெளி நிலையமான நாசா விண்வெளித் துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகின்றது.
இவ்வாறான நிலையில், தற்போது எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஒரு குழுவை அனுப்ப உள்ளது.
குறித்த குழுவினர் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி ஏவுதளத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு செல்லவுள்ளனர்.
நாசா மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் 7-வது குழு இதுவாகும்.
குறித்த குழுவில் நாசாவின் ஜாஸ்மின் மொக்பெலி, ஐரோப்பிய விண்வெளி வீரர் ஆண்ட்ரியாஸ் மொகென்சென், ஜப்பானை சேர்ந்த சடோஷி புருகாவா மற்றும் ரஷியாவின் கான்ஸ்டான்டின் போரிசோவ் ஆகிய விண்வெளி வீரர்கள் செல்கின்றனர்.
இவர்கள் ஒகஸ்ட் 17-ம் திகதி தங்களது பணியை தொடங்க உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.