Paristamil Navigation Paristamil advert login

'தக்லைஃப்' படத்தின் முக்கிய அறிவிப்பு..

'தக்லைஃப்' படத்தின் முக்கிய அறிவிப்பு..

24 தை 2024 புதன் 13:53 | பார்வைகள் : 4376


உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘தக்லைஃப்’ படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மணிரத்னம் அவர்களின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் இன்று முதல் படப்பிடிப்பு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, கௌதம் கார்த்திக் , ஜெயம் ரவி, ஜோஜு ஜார்ஜ், த்ரிஷா மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் நடிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கமல்ஹாசன் ’இந்தியன் 2’ ’கல்கி 2898’ ஆகிய படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்ட நிலையில் தற்போது அடுத்த படத்தின் படப்படிப்பையும் தொடங்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்