Paristamil Navigation Paristamil advert login

பெண்களுக்கு COVID தடுப்பூசிகள் ஆபத்தானது. பிரான்ஸ் சுகாதாரத்துறை.

பெண்களுக்கு COVID தடுப்பூசிகள் ஆபத்தானது. பிரான்ஸ் சுகாதாரத்துறை.

24 தை 2024 புதன் 16:22 | பார்வைகள் : 7743


இன்று பிரான்ஸ் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் COVID 19க்கு எதிரான தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்ட பின்னர், பெண்கள் மாதவிடாய் கோளாறுகள் ஏற்பட்டு, பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டார்கள் என்பதனை ஏற்றுக் கொண்டுள்ளது.

ஃபைசர் அல்லது மாடர்னா தடுப்பூசியைப் ஏற்றிக்கொண்ட 20% சதவீதமான பெண்கள் அதிக இரத்தப்போக்கு காரணமாக 2021, 2022 காலப்பகுதியில் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டார்கள். தடுப்பூசி ஏற்றிக்கொண்ட ஒன்று முதல் மூன்று மாதங்களில் கடுமையான மாதவிடாய் இரத்தப்போக்கு பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது. என்பதினை ஐரோப்பிய மருந்துகள் ஏஜென்சி (EMA) வும் ஏற்றுக் கொண்டுள்ளது.

இந்த கோளாறுகள் மூன்று மாதங்களில் மறைந்து விடும் என்றும், சிலருக்கு மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டு பின்னர் வளமையான நிலைக்கு திரும்பி விடும் என்றும் மருந்து ஆணையம் (ANSM)  தன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்