Paristamil Navigation Paristamil advert login

◉ பிரான்ஸ் முழுவதிலும் இருந்து TOBLERONE சொக்கலட்டுகள் மீறப்பெறப்படுகின்றன!

◉ பிரான்ஸ் முழுவதிலும் இருந்து TOBLERONE சொக்கலட்டுகள் மீறப்பெறப்படுகின்றன!

24 தை 2024 புதன் 16:30 | பார்வைகள் : 8202


உலகப்புகழ்பெற்ற TOBLERONE சொக்கலட்டுகள் பிரான்ஸ் முழுவதும் மீளப்பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைகள், Eurostar சேவைகள், விமான நிலையங்கள் போன்ற அனைத்து இடங்களிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள குறித்த சொக்கலட்டுகளே விற்பனையில் இருந்து மீளப்பெறப்படுகின்றது.

100 கிராம் எடையுள்ள TOBLERONE சொக்கலேட் பொதியில் நெகிழி (plastique) க்லந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. நவம்பர் 22 ஆம் திகதியில் இருந்து ஜனவரி 18 ஆம் திகதிக்குள் விநியோகம் செய்யப்பட்ட (விநியோக இலக்கங்கள் OOY4333553, CWS1234022 மற்றும் CWS1234031) கொண்ட சொக்கலேட் பெட்டிகளை வாங்கியோர் அதனை உட்கொள்ள வேண்டாம் எனவும், அதனை கடைகளில் மீள கொடுத்து பணத்தினை பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீளப்பெறப்படுவதற்கான காலாவதி திகதி பெப்ரவரி 1 ஆம் திகதியாகும். மேலதிக விபரங்களுக்கு 06.75.22.22.18. எனும் தொலைபேசியில் அழைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்