Paristamil Navigation Paristamil advert login

மஹிந்தவின் விசுவாசியான இராஜாங்க அமைச்சர் விபத்தில் பலி

மஹிந்தவின் விசுவாசியான இராஜாங்க அமைச்சர் விபத்தில் பலி

25 தை 2024 வியாழன் 03:00 | பார்வைகள் : 3933


கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.

கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இன்று(25) அதிகாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், இராஜாங்க அமைச்சரும் இன்னும் நால்வரும் பயணித்த வாகனம் கொள்கலன் ஊர்தியொன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தரும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை 2 மணியளவில் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் R 11.1 கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும், விபத்தில் உயிரிழந்த பாதுகாப்பு அதிகாரி ஜெயக்கொடி என்ற காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் ஆவார்.

 இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசுவாசி என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்