பிலிப்பைன்சில் படகு கவிழ்ந்து விபத்து - 26 பேர் பலி

28 ஆடி 2023 வெள்ளி 09:21 | பார்வைகள் : 12949
பிலிப்பைன்சிலுள்ள ஏரியொன்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 26 பேர் பலியாகியுள்ளனர்.
பிலிப்பைன்ஸ் Piñயn நகரில் இருந்து ஏரி வழியாக Talima தீவிற்கு பயணிகளுடன் பயணித்த படகே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
அந்த படகில் 70 பயணிகள் பயணித்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது திடீரென பலத்த காற்றுடன், கடும்மழை பெய்தமையால் படகின் ஒரு பக்கத்தில் எடை அதிகரித்த காரணத்தினாலேயே குறித்த படகு ஏரியில் மூழ்கியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடபட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் 42 பேர் மாத்திரம் பயணிக்கக்கூடிய படகில் 70 பேர் பயணித்தமையே விபத்துக்கான காரணம் என்றும் பயணிகள் யாரும் உயிர்காக்கும் கவச உடை அணிந்திருக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1