இன்று ஏழாவது வருடமாக ‘Nuit de la solidarité'

25 தை 2024 வியாழன் 07:42 | பார்வைகள் : 10493
இன்று ஜனவரி 25 ஆம் திகதி, இல் து பிரான்சின் ஒற்றுமைக்கான இரவு (Nuit de la solidarité) நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும் இல் து பிரான்ஸ் மாகாணம் முழுவதும் வீதிகளில் படுத்துறங்கும் வீடற்றவர்களை (SDF) கணக்கிடும் இந்த நிகழ்வு, இவ்வருடம் ஏழாவது ஆண்டாக இடம்பெறுகிறது. முன்னதாக கடந்த 2023 ஆம் ஆண்டு பரிசுக்குள் 3,015 வீடற்றவர்கள் வீதிகளில் படுத்துறங்குவதாக கணக்கிடப்பட்டிருந்தது. இந்த எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 16% சதவீதத்தால் அதிகமாகும்.
அதையடுத்து, இவ்வருடத்துகான கணக்கெடுப்பு இன்று வியாழக்கிழமை இரவு இடம்பெறுகிறது. இதற்காக பல தன்னார்வ தொண்டர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.