இன்று வெளியாகிறது பிரான்சில் வெளிநாட்டவர்களின் தலையெழுத்து. Projet de loi immigration.
25 தை 2024 வியாழன் 09:48 | பார்வைகள் : 5898
நீண்ட இழுபறிகளுக்கு பின்னர் கடந்த டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 'Projet de loi immigration' எனும் வெளிநாட்டவர்களை கட்டுப்படுத்தும் அல்லது மட்டுப்படுத்தும் அல்லது ஒழுங்குபடுத்தும் சட்ட வரைவு 'Conseil constitutionnel' எனும் அங்கீகாரம் உள்ள மேற்சமையிடமிருந்து இன்று மாலை முடிவுகள் வெளியாக உள்ளது.
பிரான்சில் வசிக்கின்ற வெளிநாட்டவர்களின் வதிவிட அனுமதி உரிமை, வேலை இருந்தும் வதிவிட அனுமதி இல்லாதவர்களுக்கு வதிவிட அனுமதிப்பத்திரம் வழங்குதல், வெளிநாட்டவர்களுக்கு பிரான்சில் பிறக்கும் பிள்ளைகளுக்கான பிரஜா உரிமை, அரச உதவி தொகைகளை பெற்றுக் கொள்ளுதல், என 86 சட்ட வரைவுகளை, ஏறத்தாழ ஒரு மாத காலம் ஆராய்ந்த, மேற் சபை தங்களின் முடிவுகளை இன்று மாலை அறுவிக்கவுள்ளது.
நாடாளுமன்றத்தால் வழங்கப்பட்ட சட்ட வரைவுகளை அப்படியே ஏற்றுக் கொள்ளவும், அல்லது அதில் திருத்தங்கள் செய்யவும்' அல்லது அதில் குறித்த சில சட்டங்களை ரத்து செய்யவும், பரிந்துரைக்கும் அதிகாரம் உள்ள 'Conseil constitutionnel' எனும் மேற் சபை எவ்வாறான முடிவுகளை இன்று மாலை அறிவிக்கப் போகிறது எதிர்பார்ப்பு பல மட்டங்களில் அதிகரித்து உள்ளது.